உருளைக்கிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை புரியும் ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது. ஆனால் உருளைக்கிழங்கை சருமத்திற்கு பயன்படுத்துவதால் தெளிவான பளபளக்கும் சருமம் கிடைக்கும்
சரும வெண்மைக்கு தேவையான பொருட்கள்:
3 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு
2 ஸ்பூன் தேன்
செய்முறை: உருளைச் சாறுடன் தேனை கலந்து கொள்ளவும். இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும். 10-15 நிமிடங்கள் காய விடவும். முழுவதும் காய்ந்தவுடன் முகத்தைக் கழுவுங்கள். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பளபளக்கும் சருமத்திற்கு:
தேவையான பொருட்கள்:
2 ஸ்பூன் உருளைச் சாறு
2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
1/2 ஸ்பூன் தேன் (தேவைப்பட்டால்)
செய்முறை: உருளை மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் தேன் சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வரலாம்.
சரும வறட்சி, கட்டிகளுக்கு உருளை மற்றும் தக்காளி பேஸ் மாஸ்க்: தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் உருளை விழுது அல்லது சாறு 1 ஸ்பூன் தக்காளி விழுது அல்லது சாறு 1 ஸ்பூன் தேன்
செய்முறை: உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சாறுகளை ஒன்றாகக் கலக்கவும். இந்த கலவையுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலக்கவும். இதனை உங்கள் முகம் மற்றும் கட்டிகள் உள்ள இடத்தில் தடவவும். கட்டி மறையும் வரை தினமும் செய்து வரலாம்.
கருமையை நீக்க உருளை மற்றும் அரிசி மாவு தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு
1 ஸ்பூன் அரிசி மாவு
1 ஸ்பூன் தேன்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு (தேவைப்பட்டால்)
செய்முறை: மேலே கூறிய எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இதனை உங்கள் முகத்தில் தடவி, காய விடவும். காய்ந்தவுடன் தண்ணீர் தெளித்து முகத்தை மென்மையாக சுழல் வடிவத்தில் ஸ்க்ரப் செய்யவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனைச் செய்யலாம்.
எண்ணெய் பசை சருமத்திற்கு உருளைக் கிழங்கு மற்றும் ஓட்ஸ் பேஸ் மாஸ்க்:
தேவையான பொருட்கள்:
3 உருளைக்கிழங்கு (வேகவைத்து தோல் உரித்தது )
2 ஸ்பூன் பால்
1 ஸ்பூன் ஓட்ஸ்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை : உருளைக்கிழங்கை மசித்து ஒரு கிண்ணத்தில் போடவும். இதனுடன் மற்ற மூலப்பொருட்களை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம்.
உருளைக்கிழங்கு மற்றும் யோகர்ட் தேவையான பொருட்கள்:
1/2 உருளைக்கிழங்கு துருவியது
2 ஸ்பூன் யோகர்ட்
செய்முறை: உருளைக்கிழங்கு மற்றும் யோகர்டை ஒன்றாகக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு முழுவதும் காய்ந்தவுடன் முகத்தைக் கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இதனைப் பயன்படுத்தலாம். எப்படி வேலை செய்கிறது யோகர்டிற்கு வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை உள்ளது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை போக்கி, துளைகளை இறுக்கமாக்குகிறது . தீங்கு விளைவிக்கும் கூறுகள் சருமத்திற்கு சேதம் ஏற்படுத்தாமல் இவைத் தடுக்கின்றன.