பிரிட்டனைச் சேர்ந்த றக்பி வீராங்கனையொருவர் அழகு ராணியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவ்வணியின் சார்பில் போட்டிகளில் பங்குபற்றிய கோல் டொபின், முதலாவது ட்ரை புள்ளிகளைப் பெற்றதன் மூலம் ஊடகங்களில் பிரபலமானார்.
அதேவேளை, மேற்படி றக்பி போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்த காலத்திலேயே அழகுராணி போட்டிகளிலும் கோல் டொபின் பங்கு பற்றியமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
உள்ளூர் அழகுராணி போட்டிகளில் பங்குபற்றிய கோல் டொபின் பின்னர் மிஸ் வேல்ஸ் அழகுராணி பட்டத்துக்கும் குறிவைத்தார்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற மிஸ் வேல்ஸ் அழகுராணி போட்டிகளில் மிஸ் ரொன்டா சைனன் டெவ் 2016 அழகுராணியாக கோல்டி டொபின் முடி சூட்டப்பட்டுள்ளார்.
‘எனது பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி அழகுராணி போட்டிகளில் பங்குபற்றியதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
அடுத்த வருடம் இப் பிராந்தி யத்திலிருந்து மேலும் பல யுவதிகள் இப் போட்டியில் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கிறேன்’ என கோல் டொபின் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் மிஸ் இங்கிலாந்து அழகுராணி போட்டிகளில் 21 வயதான அமி பிரவுண் எனும் யுவதி பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
