அழிவடைந்த பரீட்சை சான்றிதழ்கள் மற்றும் சீருடைகளை இலவசமாக வழங்க நடவடிக்கை..

அனர்த்தம் காரணமாக அழிவடைந்த பரீட்சை சான்றிதழ்கள் மற்றும் பாடசாலை சீருடைகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கையில்; வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் குறித்து அரசு விசேட கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், காணாமல் போன சான்றிதல்களை மீளப்பெற கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பம் செய்தால் சாதாரண தர, உயர்தர மற்றும் ஏனைய பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்களை இலவசமாக வழங்கத் தாம் தயார் என பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சேவையில் குறித்த இந்த பரீட்சை சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

(rizmira)