“நமது கண் முன்னே உலகம் சிதைந்து வருகிறது” என்று அமெரிக்காவிற்கான பிரான்ஸ் தூதர் ட்வீட் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று(09) நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளில் குடியரசுக்கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஹிலரியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அமெரிக்காவிற்கான பிரெஞ்சு தூதர் ஜெரார்ட் அரட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,
பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து இந்தத் தேர்தல், இப்போது எல்லாமே சாத்தியம்தான், ஒரு உலகமே நமது கண் முன்னால் சிதைகிறது. தலைசுற்றுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
நீண்டகாலம் தூதரக அனுபவம் உடையவரான ஜெரார்ட், தற்போது டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமையவுள்ள புதிய அமெரிக்க அரசுடன் இணைந்து செயற்பட வேண்டியவர்.
இந்நிலையில், அவரது இந்தக் கருத்து பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது. எனினும் சில நிமிடங்களில் அவரது ட்வீட் அழிக்கப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.