அழைக்காமலேயே மேடையேறிய தஹாம் சிறிசேன

கொழும்பு றோயல் கல்லூரிக்கும், புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற 137வது கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் மேடையேறியுள்ளார்.

குறித்த கிரிக்கெட் போட்டியில் றோயல் கல்லூரி வெற்றியீட்டியிருந்தது.

இதற்கான பரிசளிப்பு நிகழ்வு குறித்த பாடசாலையின் பழைய மாணவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் டயலொக் நிறுவனத்தின் தலைவரும், கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரியின் தலைவருமான ஹான்ஸ் விஜயசூரிய தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, ஜனாதிபதி புதல்வர் தஹாம் சிறிசேன பரிசளிப்பு இடம்பெற்ற நேரத்தில் குறித்த மேடையில் ஏறிய புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த பரிசளிப்பு மேடைக்கருகில் றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களாக பல அமைச்சர்கள் அமைதியாக பரிசளிப்பு நிகழ்வை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் றோயல் கல்லூரியின் பழைய மாணவரான தஹாம் சிறிசேன பரிசளிப்பு மேடைக்கு யாருடைய அழைப்பும் இன்றி ஏறியமை, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.