(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ திடீர்சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுவாச உபகரண உதவி பொருத்தப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
நேற்று மகரகம் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுஜனபெரமுனவின் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாத நிலையில் இந்த செய்தி பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான புகைப்படங்கள் மிக வேகமாக பரவி வருகின்றன. எனினும் இந்த செய்தி போலியானதென தெரிவிக்கப்படுகிறது.