சர்ச்சைக்குள்ளாகியுள்ள அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பான விசேட அமைச்சரவை கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.
இந்த விசேட அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.