அவன்ட்கார்ட் கடற்பாதுகாப்பு சேவை நிறுவனம் அரசுக்கு பில்லியன் கணக்கில் வழங்க வேண்டும்

அவன்ட்கார்ட் கடற்பாதுகாப்பு சேவை நிறுவனம் அரசாங்கத்துக்கு 3.1 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாரிய ஊழல்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு இந்தக் கோரலை விடுத்துள்ளது.

2012- 14ம் ஆண்டுகளுக்காகவே இந்தத் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

அவன்ட்கார்ட் நிறுவனம் கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்கி வந்த நிறுவனமாகும்.

குறித்த நிறுவனம் அதிகளவான பண சம்பாதிப்பில் ஈடுபட்டபோதும் அதில் குறைந்தளவான தொகையே அரசாங்கத்துக்கு செலுத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதன் நடவடிக்கைகளை கடற்படையினருக்கு கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால நடவடிக்கை எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.