நாம் தினமும் படிப்பு, வேலை என்று டென்சனிலேயே வாழ்ந்து வருகிறோம். சிரிப்பதற்கு சில நிமிடங்கள் கூட ஒதுக்குவதில்லை. அன்றாடம் வாழ்க்கையில் நடக்கும் விடயங்களில் நிறைய நகைச்சுவை ஒளிந்திருக்கிறது. ஆனால் நாம்தான் அதை கண்டுகொள்வதில்லை.
இதோ நீங்கள் சிரிக்க சில நிமிடங்களுக்கான ஜோக்குகள்…
1. ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. ?
பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.
2. உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?
அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.
3. உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?
வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?
திரும்பவும் இவன் கேட்டான் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ?
நீ அவளைக் காதலிக்கத்தான். ..
பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?
அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே. எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?- லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது –
அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.
4. நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.
ஐயோ அப்புறம் என்னாச்சி?
அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி வேலைக்குப் போக நேரமாச்சு எழுந்திரின்னு கனவைக் கலைச்சுட்டா.
5. என் காதுல நீங்க போட்ட புதுத் தோடு எங்கேயோ விழுந்திடிச்சுன்னு சொன்னா, அதுக்குச் சந்தோஷப்படறீங்களே. .. ஏன் ?
நான் உன் காதுல போட்டதுல ஏதோ இந்த ஒண்ணாவது விழுந்திருக்கேனுதான்.
6. உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?
ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்.
7. மூணு யானை கர்ப்பமா இருக்குது, அதுல ஒண்ணுக்கு பன்னிரண்டு மாசம். இன்னொண்ணுக்கு பதினாறு மாசம். கடைசி யானை இருபது மாசம். இதுல எந்த யானை முதல – குட்டி போடும்.
கடைசி யானைதான்
தப்பு. எதுவுமே முதலைக் குட்டி போடாது. எல்லாமே யானைக் குட்டிதான் போடும்.
8. ஒரு மாவட்ட கலெக்டருக்கு வேறு ஊருக்குப் போகச் சொல்லி டிரான்ஸ்ஃபேர் ஆர்டர் வந்தது. கலெக்டரின் ஊழியர்கள் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தினார்கள். விழா முடிந்த பிறகு ஒருவர் மட்டும் ஒரமாக உட்கார்த்து அழுது கொண்டிருந்தார்.
அவரிடம் போன கலெக்டர் அவரைப் பார்த்துக் கண்கலங்கி கவலைப்படாதே நீ என்மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பாய் என்று தெரியாது அடுத்து வரப்போகம் கலெக்டர் என்னைவிட நல்லவராக இருப்பார் என்று ஆறுதல் சொன்னார்.
அதற்கு அழுதுகொண்டிருந்த அந்த நபர் சும்மா எனக்காகப் பொய் சொல்லாதீங்க சார் இதை நான் நம்பமாட்டேன். என்னா உங்களுக்கு முன்னாடி இருந்த கலெக்டரும் இதையேதான் சொன்னாரு என்றார்.