அவிஸாவளை – கேகாலை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு…

அவிஸாவளை – கேகாலை பிரதான வீதியில் தல்துவ பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளமை காரணமாக குறித்த வீதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.

மழை பெய்கின்ற வேளைகளில் வாகனங்களின் வெளிச்ச விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை செலுத்துவது அவசியம் என அதன் பணிப்பாளர் எஸ் ஓப்பநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

காலநிலையின் சீரற்ற தன்மையினால் விபத்துக்களை தவிர்ப்பதற்கு சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.