(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தபத்து சதம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப் போட்டியில் அவர் மொத்தமாக 66 பந்துகளை எதிர்கொண்டு 6 ஆறு ஓட்டம், 12 நான்கு ஓட்டம் அடங்கலாக 113 ஓட்டங்களை குவித்தார்.
இதன் மூலம் மகளிர்க்கான சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் அரங்கில் சதம் விளாசிய முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனையை அவர் பதிவுசெய்துள்ளார்.