அவுஸ்திரேலியாவில் விமான நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த தீவிரவாத தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதனை அந்நாட்டு பிரதமர் உறுதி செய்துள்ளதாகவும் அவ்வூடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நான்கு பேரை சிட்னி நகரில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்துள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என அவுஸ்திரேலியா நாட்டின் மத்திய பொலிஸ் ஆணையாளர் அன்ட்ரூ கொல்வின் கூறியுள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 43 ஆவது ஏற்பாட்டை மீறி , அமைச்சரவை சட்டத்துக்கு அப்பாற்பட்ட…
இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்ஷான் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் போட்டியில்…