அவுஸ்திரேலியா அணி பந்தினை சேதம் செய்வது குறித்து சந்தேகம் நிலவவே கமெராமேன்களை உஷார்படுத்தினேன்…

புற்கள் அதிகமாக உள்ள ஆடுகளத்தில் Reverse Swing இற்கு வேலை இல்லை என்பதால், அவுஸ்திரேலியாவின் மோசடியை பொறி வைத்து பிடித்துள்ளார் டி வில்லியர்ஸ்.

Ball Tampering… இந்த வார்த்தை தான் தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட்டை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.

தென்னாபிரிக்கா – அவுஸ்திரேலியா இடையிலான 03-வது டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியின் 03-வது நாள் ஆட்டத்தின்போது அவுஸ்திரேலிய தொடக்க வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய வீரர்களின் மோசடியை அம்பலப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பெனி டி வில்லியர்ஸ். இவர்தான் முன்னதாக ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்காக அவுதிரேலிய அணி ஏதாவது செய்யும் என்று நம்பியுள்ளார். தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட்ட டி வில்லியர்ஸ் கமராமான்களை கவனமாக இருக்குமாறு அறிவுறித்தியுள்ளார்.

இதுகுறித்து பெனி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘புற்கள் நிறைந்து காணப்படும் ஆடுகளத்தில் உடனடியாக பந்து Reverse Swing இற்கு ஏற்ற வகையில் மாற்றமடைவது சாத்தியமற்றது. இது ஒன்றும் பாகிஸ்தான் பிட்ச் அல்ல. ஒவ்வொரு cm இற்கும் வெடிப்பு இருப்பதற்கு. ஆடுகளத்தில் புற்கள் நிறைந்து இருக்கிறது பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் போது, Reverse Swing இற்கு ஏற்ற வகையில் பந்து ஒரு பக்கம் வெயிட்டாகவும், மறுபக்கம் எடை குறைவாகவும் இருக்க ஏதாவது செய்தாக வேண்டும்.

30 ஓவருக்கு முன்பே அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் Revers Swing செய்தனர். அப்படியென்றால் அவர்கள் ஏதோ செய்திருக்கிறார்கள். கிரிக்கெட் பந்தில் இரும்பு கம்பிகள் அல்லது அது போன்ற பொருட்களை கொண்டு சேதப்படுத்தினால் தான் உடனடியாக Reverse Swing ஆகும்.

அவுஸ்திரேலிய வீரர்கள் 26, 27 மற்றும் 28-வது ஓவர்களில் Reverse Swing செய்தால் அவர்கள் ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்க வேண்டும் என்று முன்னதாகவே கூறினேன். நான் எங்களுடைய கமராமான்களிடம், அவுஸ்திரேலிய வீரர்களை உற்று கவனியுங்கள் என்றேன். அவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் தேடிக்கொண்டிருந்தனர். பின்னர் பான்கிராப்ட் மாட்டிக்கொண்டார்’’ என்றார்.