அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி – 4 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு…

(FASTNEWS|COLOMBO) அவுஸ்ரேலிய மற்றும் இலங்கை கடற்படையினருக்கும் இடையில் பாரிய கடற்படைக் கூட்டுப்பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக அவுஸ்ரேலிய படையினர் இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய பிரதித் தூதுவர் ஜோன் பிலிப் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையுடன் பாரிய கூட்டுப்பயிற்சிகளில் பங்கேற்பதற்காக 1000 அவுஸ்ரேலியப் படையினரும் 04 போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும் அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘இந்தோ – பசுபிக் முயற்சி – 2019’ என்ற பெயரிலான இந்தக் கூட்டுப்பயிற்சியில் அவுஸ்ரேலியாவின் இராணுவத்தினர் விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் பங்கேற்கின்றனர்.