அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக பொண்டிங்குடன் இன்னும் 03 பேர்…

அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தினை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் டேரல் லீமன் போட்டித் தொடருக்கு இடையே குறித்த பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.

டேரன் லீமன் 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியா அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்ததோடு, எதிர்வரும் 2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டி வரையில் அவரது பதவிக்காலம் தொடர்கின்ற நிலையிலேயே அவரது இராஜினாமா தீர்மானம் வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் பிரதான தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களது பெயர்கள் சில அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தினால் முன்மொழியப்பட்டு வருகின்றதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவரான ரிக்கி பொண்டிங் குறித்து முதற்கண்ணாக அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

அவ்வாறே, அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஜஸ்டின் லென்கர் (Justin Langer), ஜாசன் கிலெஸ்பி (Jason Gillespie), ரிக்கி பொண்டிங் (Ricky Ponting) மற்றும் ப்ரேட் ஹட்டின் (Brad Haddin) ஆகியோரின் பெயர்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

Justin Langer

Jason Gillespie

Brad Haddin

Ricky Ponting