அவுஸ்திரேலிய அணியிலிருந்து இருவர் நாளைய இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து விலகல்..

உபாதை காரணமாக மேலும் அவுஸ்திரேலிய வீரர்கள் இருவருக்கு இலங்கை அணியுடன் மோதும் இருபதுக்கு20 போட்டியினை இழக்க நேரிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் ஆரோன்ச் பின்ச் மற்றும் கிறிஸ் லீன் ஆகியோரே இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.

பின்ச் நேற்றைய(04) போட்டியில் உபாதைக்கு உள்ளாகியதனை அடுத்து கிறிஸ் லீன் பயிற்சியின் போது, உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.

இருதரப்பினருக்கு இடையிலான முதல் இருபதுக்கு20 போட்டியானது நாளை(06) நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.