அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஷோன் மாஷ் உலகக் கிண்ண தொடரில் இருந்து நீக்கம்

(FASTGOSSIP | COLOMBO) – எலும்பு முறிவுக்கு உள்ளாகியமை காரணமாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஷோன் மாஷ் உலகக் கிண்ண போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் முகாமை தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, துடுப்பாட்ட வீரர் மற்றும் விக்கெட் காப்பாளராக பீடர் ஹென்டிஸ்கொம்ப் அணியில் உட்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியானது 2019 ஒருநாள் உலகக் கிண்ண போட்டித் தொடரில் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.