2 ஆண்டுகளுக்கான வீரர்கள் ஒப்பந்தம் வழங்குவதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டை தேர்வு செய்யும் அவுஸ்திரேலிய வீரர்களை மனம் மாற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகளின் படி, கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் செயல் பொது மேலாளர் பேட் ஹோவர்ட், ஆஸி. கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தை அணுகியுள்ளார்.
இதன் போது வீரர்களுக்கு 2 ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற புதிய உத்தியை பேட் ஹோவர்ட் முன்மொழிந்துள்ளார்.
டெஸ்ட் தலைவர் ஸ்மித், டேவிட் வோர்னர், உள்ளிட்ட வீரர்களுக்கு 2 ஆண்டு கால ஒப்பந்த முறையை முன்மொழிந்துள்ளார்.
ஆனால் வீரர்களிடமிருந்து இதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.