(FASTNEWS | COLOMBO) – உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை அடுத்து அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிராக விதித்திருந்த சுற்றுலாத் தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது.
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரின் டுவிட்டர் பக்கத்தில் குறித்த இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரது சுற்றுலா ஆலோசனை அரசாங்கப் பக்கத்தில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து குறுகிய காலத்திற்கு அவுஸ்ரேலிய நாட்டவர் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதை தனிப்பட்ட பாதுகாப்பு விடயமாக செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டி இலங்கை சுற்றுப்பயணத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.