முதலாவது ஐரோப்பிய விளையாட்டுப் போட்டிகள் அஸர்பஜான் தலைநகர் பாகுவில் ஆரம்பமாகியுள்ளது.
இப்போட்டிகளுக்கான ஆரம்ப விழா அமெரிக்க பொப் நட்சத்திரம் லேடி ஹாகாவின் பாடலுடன் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இசைக் கலைஞர்களின் இசை நிகழ்வுகள் மற்றும் ஆடல் பாடல் என அனைத்தும் மக்களின் கண்களிற்கும் செவிகளுக்கும் விருந்தளிப்பதாக அமைந்தது.
முதலாவது பதிப்பாக ஆரம்பமாகியுள்ள இப் போட்டிகளில் பங்கேற்பதற்காக 50 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரம் வீர வீரங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் 20 விளையாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரோமில் நடைபெற்ற ஐரோப்பிய ஒலிம்பிக் சபையின் 41 ஆவது பொதுக் குழுக் கூட்டத்தில் முதலாவது ஐரோப்பிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான உரிமம் அஸர்பஜானிற்கு வழங்கப்பட்டது.
அத்துடன் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இவ்விளையாட்டு போட்டிகளில் அடுத்த பதிப்பு எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.