(FASTNEWS|COLOMBO) – டெங்குக் காய்ச்சலுக்காக அஸ்பிரின் உள்ளிட்ட சில மருந்துவகைகளைப் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஸ்பிரின் மற்றும் ஏனைய அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் டெங்கு நோயாளர்களின் உடல்நிலை மோசமடைவதாக சுகாதார அமைச்சினால் நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள், அஸ்பிரின், புருபன், டைக்கிலோபெனாக், சோடியம், மெபனமிக் அசிட் மற்றும் இந்த வகையினைச் சேரந்த ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் ஸ்ரிரொயிட் வகையினைச் சேர்ந்த மருந்துகளைப் பயன்படுத்தக் வேண்டாம் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இதனால் டெங்கு நோயாளர்களுக்கு இத்தகைய மருந்துகளைப் பரிந்துரைப்பதை வைத்தியர்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.