ஆகஸ்ட் 5 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடத்தப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பொறுப்பேற்கப்படுகின்றன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித அறிவித்துள்ளார்.

இதேவேளை, 2017ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைப் பெறுபேறுகளை அன்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மறுநாள் கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.