(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
மியன்மாரின் முன்னாள் அரசு தலைவி ஆங் சான் சூகி, மேலும் 4 ஊழகல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவரின் சிறைத்தண்டனைக் காலம் மேலும் 6 வருடங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு மூடிய நீதிமன்ற அறையில் நடைபெற்றது. இவ்விசாணையை பார்வையிட பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை. வழக்கு விசாரணை விபரங்களை வெளியிட ஆங் சூகியின் சட்டத்தரணிகளுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச நிலத்தை சந்தைப் பெறுமதியை விட குறைந்த கட்டணத்துக்கு வாடகைக்கு விட்டமை, காருண்ய சேவைகளுக்குப் பயன்படு;த்த வேண்டிய நிதியை பயன்படுத்தி வீடொன்றை நிர்மாணித்தமை தொடர்பாக இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
நான்கு குற்றச்சாட்டுகளில் சூகி குற்றவாளியாக காணப்பட்டார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், 3 குற்றச்சாட்டுகளுக்கான தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி மொத்தமாக மேலும் 6 வருடங்கள் அவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
ஏற்கெனவே ஆங் சான் சூகிக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.