ஆசியக்கிண்ண டி20 தொடரில் மலிங்காவின் அபார பந்துவீச்சில் 14 ஓட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம் சுருண்டது.
130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்களில் 115 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இலங்கை அணியின் தலைவர் மலிங்கா முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார்.
ரோகன் முஸ்தபா எல்பிடபிள்யூ முறையில் மலிங்கா பந்தில் வீழ்ந்தார். அதே ஓவரில் கடைசி பந்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முகம்மது ஷாஷத் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன் பின்னர் ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. அந்த அணியின் எஸ்.பி.பாடீல் மட்டுமே 37 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவரில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 14 ஓட்டங்களில் தோல்வியடைந்தது.
இலங்கை சார்பில் அதன் அணித்தலைவர் 4 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் இலங்கை துடுப்பெடுத்தாட பணித்தது.
களம் இறங்கிய சந்திமாலும் தில்ஷானும் முதல் விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
தில்ஷான் 27 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் அம்ஜத் ஜாவேத் பந்து வீச்சில் முகம்மது உஸ்மான் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து விக்கெட்டுகள் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். சந்திமல் 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இருபது ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 பெற்றது.