ஆசியக் கிண்ண குழாமில் பெயரிடப்பட்டுள்ள தினேஷ் சந்திமால் அவரது விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக, அநேகமாக ஆசியக் கிண்ண போட்டிகளில் விளையாடுவது சாத்தியமில்லை என இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திமால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டால், அணியின் மாற்று வீரராக நிரோஷன் திக்வெல்ல சேர்த்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உபாதை காரணமாக தினேஷ் சந்திமால் நேற்று(02) நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு – 20 இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.