இலங்கை அணி சார்பில் சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை கைப்பற்றிய நான்காவது பிரபல வேகப்பந்து வீரர் என்ற வாய்ப்பினை பெற லசித் மாலிங்கவுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.
தற்போது வரை இருபதுக்கு – 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய பிரிவுகளில் மாலிங்க சர்வதேச கிரிக்கெட்டில் 492 விக்கெட்களை கைப்பற்றி உள்ளதோடு, எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ண போட்டிகளில் 08 விக்கெட்களை கைப்பற்றினால் குறித்த நான்காம் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இலங்கை அணி சார்பில் சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை தாண்டிய வீரர்களாக முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இடம்பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(ஒருநாள்/இருபது – 20/ டெஸ்ட்) பட்டியல்
1347 – முத்தையா முரளிதரன்
761 – சமிந்த வாஸ்
522 – ரங்கன ஹேரத்
492 – லசித் மாலிங்க
440 – சனத் ஜெயசூரிய
313 – நுவன் குலசேகர
288 – அஜந்த மென்டிஸ்