பாடசாலைகளில் ஆசியர்கள் மாணவர்களின் முன் தொலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சில் இறுதியாக நடைபெற்ற திணைக்கள தலைவர்களுடனான கலந்துரையாடலில் வடக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள ஆசியர்களுக்கு இவ்வாறு தொலைபேசிப் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது என அமைச்சின் கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்தக் கூடாது. அது தொடர்பில் மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். அதேவேளை ஆசியர்கள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்துகிறார்கள். இதனால் சில நேரங்களில் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.
ஆனால் தொலைபேசி என்பது அனைவருக்கும் தேவையான பொருளாக மாறிவருகின்றது. ஆகவே தேவை ஏற்படின் ஆசிரியர்கள் அவர்களது ஓய்வு அறையில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#reeshma