ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியின் முதலாவது வருடாந்த மாநாடு – நிதியமைச்சர் சீனா விஜயம்

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார். ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியின் முதலாவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்ளவே நிதியமைச்சர் இவ்வாறு  சீனா சென்றுள்ளார்.

ஆசிய பிராந்திய வலய நாடுகளின் நீண்ட கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த வங்கிக் கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி கட்டமைப்பின் ஆரம்ப உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்று என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.