ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு வங்காள தேசத்தில் நடந்த போட்டியில் இலங்கை சாம்பியன் பட்டம் பெற்றது.

2016 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை நடத்த இந்தியா, இலங்கை நாடுகள் விருப்பத்துடன் இல்லை.

இதனால் இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. மார்ச் முதல் வாரத்தில் ஆசிய கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.