ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குறித்த அந்த புதிய கொள்கையின் படி எந்தவொரு பாடசாலையிலும் மேலதிகமாக ஆசிரியகள் இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமெனவும் சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவ, சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டாவாறு தெரிவித்தார்.