ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

(FASTNEWS|COLOMBO) – பன்னல, சந்தலங்கா , இரபடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் இன்று(14) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த தீப்பரவலில் இரண்டு கட்டிடங்கள் அடங்கிய தொழிற்சாலையின் ஒரு கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தீப்பரவலால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.