ஆட்டத்திலும் மனித நேயத்திற்கு முதலிடம் அளித்த டென்னிஸ் வீரர் ஜோ.. (VIDEO)

டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ள பிரெஞ்சு வீரர் ஜோ-வில்பிரட் சோங்காவுக்கும் ஆஸ்திரேலியா வீரர் ஒமர் ஜெசிகாவுக்கும் இடையேயான போட்டி ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்தது.

இந்த போட்டியின் போது, ‘பால் கேர்ள்’ என்று அழைக்கப்படும் வீரர்களுக்கு பந்தை எடுத்துக் கொடுக்கும் பணியில் உள்ள இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொண்ட ஜோ, அவருக்கு ஆறுதல் கூறி மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்று பணியாளர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

பரபரப்பான போட்டியின் போதும், சக மனிதருக்கு உதவிய ஜோவை பாராட்டும் வகையில் அரங்கில் இருந்த ரசிகர்கள் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.

சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வரும் இதன் வீடியோ உங்கள் பார்வைக்கு..

[youtube url=”https://www.youtube.com/watch?v=-7UZQF4jJBQ” width=”560″ height=”315″]