ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட மற்றுமொரு இலங்கை கிரிக்கெட் வீரர் தொடர்பிலான தகவல்களை அல் ஜசீரா (Al Jazeera) தொலைக்காட்சி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற சிம்பாவ்பே அணியுடனான தொடரின் போது இடம்பெற்ற சம்பவத்துடன் இலங்கை வீரர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் கடந்த 2016ஆம் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் மைதானத்தை மாற்றியமைப்பதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில், இலங்கையின் முன்னாள் வீரர்கள் மற்றும் மைதான முகாமையாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் மற்றுமொரு ஆட்ட நிர்ண சதி குற்றச்சாட்டு எழுந்துள்ளமை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் கேள்விக்குறியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.