ஆட்ட நிர்ணய சதி குறித்து பாகிஸ்தான் உள்ளிட்ட 05 நாட்டு கிரிக்கட் அணி தலைவர்கள் ஐ.சி.சியில் முறைப்பாடு…

ஆட்ட நிர்ணய சதி தொடர்பில், தரகர்கள் தமக்கு அழுத்தங்கள் பிரயோகித்ததாக 05 நாட்டு கிரிக்கெட் அணி தலைவர்கள் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிட்டுள்ளனர்.

பாகிஸ்தான், சிம்பாப்வே உள்ளிட்ட 05 நாடுகளின் கிரிக்கெட் அணித் தலைவர்களே இவ்வாறு முறையிட்டுள்ளதாக, சர்வதே கிரிக்கெட் சபையின் பிரதிநிதி, டுபாயில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலும் தமது நிறுவனம் இன்றி வேறு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட தனியான போட்டிகளில் போதே அவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.