ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

(FASTNEWS|COLOMBO) – கணனிகளில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப கோளாறு காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவைகள் இன்று(05) தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டாலும், ஆட்பதிவு திணைக்களத்தின் ஏனைய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.