ஆண்களுக்கு முடியுமாயின் பெண்களுக்கும் முடியும் – பொன்சேகா சூளுரை..

ஆண்களுக்கு மதுபானசாலை திறக்க முடியுமாயின் பெண்களுக்கும் மதுபான சாலைகள் திறக்க முடியும்.

எனவே அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில் தவறுகள் கிடையாது என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது 2000 விகாரை கள் மூடப்பட்டதுடன் 2000 மதுபான சாலை கள் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

#g-reeshma