யாழ் பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மாணவர்கள் சிலர் அரசியல் கட்சி சார்ந்த பிரச்சாரத்தினை மேற்கொண்டதுடன், அதனை தடுக்க முற்பட்ட விடுதி பாதுகாவலரை தாக்க முற்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இச் சம்பவத்தினால் ஏற்பட்ட குழப்ப நிலையினை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவளைக்கப்பட்டதால் மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் யாழ்.பல்கலைக்கழ ஆண்கள் விடுதிக்கு காரில் வந்த யாழ்.பல்கலைக்கழ விஞ்ஞான பீடத்தின் 3 ஆம் வருட சிங்கள மாணவர்கள் மூவர் விடுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளனர்.
இவ்வாறு அத்துமீறி பிரவேசித்த அவர்களை தடுத்து நிறுத்திய விடுதி பாதுகாவலர்களையும் மீறி அவர்கள் உட்புகுந்துள்ளனர். இவ்வாறு உட்புகந்த அவர்கள் தாம் தென்னிங்கையின் அரசியல் கட்சி ஒன்றினை சார்ந்தவர்கள் என்றும், பிரச்சார கூட்டம் ஒன்றினை மாணவர்கள் மத்தியில் நடாத்துவதற்காகவே உள்ளே வந்துள்ளோம் என்றும் தங்களை தடுத்து நிறுத்தினால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் விடுதி பாதுகாப்பாளரை அச்சுறத்தியுள்ளனர்.
இருப்பினும் அவ்வாறான கூட்டம் ஒன்றினை தான் நடாத்த அனுதிக்க முடியாது என்று விடுதி பாதுகாவலர் தெரிவித்ததை அடுத்து குறித்த சிங்கள மானவர்கள் விடுதி பாதுகாவலர் மீது தாக்குதல் நடாத்தவும் முற்பட்டுள்ளனர்.
மேலும் தாம் புலனாய்வாளர்கள் என்றும், பொலிஸ் அதிகாரிகள் என்று கூறியும் விடுதி பாதுகாவலரை அச்சுறத்தியும் உள்ளனர்.
இவ்வாறு அச் சிங்கள மாணவர்களுக்கும், விடுதி பாதுகாப்பாளருக்கும் இடையில் முரகல் நிலை நீடித்துக் கொண்டிருக்கையில் சில விரிவுரையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.
சும்பவ இடத்திற்கு விரிவுரையாளர்களும் வருகைதந்திருந்தனர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதந்திருந்த போதும் குறித்த சிங்க மாணவர்களுடன் அவர்கள் உரையாடிவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டனர்.
இதன் பினன்ர் அங்கு வந்த விரிவுரையாளர்கள் மிக நீண்ட நேரமாக நடைபெற்ற இழுவறிகளுக்கு மத்தியில் நிலமையினை சமரசப் படுத்தியிருந்தனர். இதன் பின்னர் அத்துமீறி நுழைந்த சிங்க மாணவர்கள் அங்கிருந்து வெளியேறியும் உள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக உடனடியாகவே யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தெரியப்படுத்தப்பட்டள்ளது. இருப்பினும்
நேற்றுக் காலை குறித்த சம்பவம் தொடர்பில் துணைவேந்தரிடம் உரிய முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தனர் வசந்தி அரசரட்ணத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
யாழ்.பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 3 வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்களினால் விடுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக முறைப்பாடும் என்னிடத்தில் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரச்சினைகளை ஏற்படுத்தியவர்களில் இருவர் பல்கலைக்கழக மாணவர்கள். மற்றுமொருவர் பல்கலைக்கழகத்தினை சாராதவர்.
பிரச்சினைகளை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் அண்மையில் வேறு ஒரு சம்பவத்தில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டிருந்தார்.
இதன்படி நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற பிரச்சினை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இருப்பினும் அரசியல் சட்சி சார்ந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பாக தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.