ஆனந்த சமரசேகர நீதிமன்றில் சரண்…

றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர சற்றுமுன்னர் (01:15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் சரணடைந்துள்ளார்.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைவாக, பெற்றுக் கொள்ளப்பட்ட உயிரிழந்த வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் ஆனந்த சமரசேகர கைது செய்ய முடியும் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)