அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் இலங்கை மொத்த வியாபார ஸ்தாபக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விஷேட வில்பத்து தொடர்பான ஊடகவியலாளர்சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
வில்பத்துக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் அமைச்சர் ரிஷாத் போதைப்பொருள் வியாபாரம் செய்வதாகவும் கடந்த சனியன்று காலை விகாரமகாதேவி பூங்கா அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஆனந்த தேரர் தெரிவித்திருந்தார், இதனைத்தொடர்ந்து அமைச்சரையும் முஸ்லிம் சமூகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் ஊடகங்களுக்கு கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடியாக அமைச்சர் ரிஷாத் இன்றைய சந்திப்பில் கூறுகையில்;
“முஸ்லிம் சமூகம் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டை காட்டிக் கொடுத்தவர்களல்லர். எனக்கும் என்னுடைய சமூகத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கும், மாத்தறை ஆனந்த ஹிமி அவர்களுக்கு பகிரங்க சவால் ஒன்றை முன்வைக்கிறேன்.
எந்த ஊடகத்திலும் நேரடி கலந்துரையாடலுக்கு நான் தயார். சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஒடுக்கக் கூடிய வகையில் எந்த ஒரு தேர்தல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டாலும், அதற்கெதிராக நாம் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம்.
எனவும் தெரிவித்திருந்தார்.
முழுமையான வீடியோ இனை காண;
[youtube url=”https://www.youtube.com/watch?v=s-5EgOfvH_g&feature=youtu.be” width=”560″ height=”315″]
(rizmira)