ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி

(FASTNEWS|COLOMBO) – ஆப்கானிஸ்தானை 23 ஓட்டத்தினால் வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகள் அணி உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றுள்ளது.

12 ஆவது உலகக் கிணணத் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றது.

312 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 23 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது.