தமது அணியின் நிலைப்பாடு குறித்து தான் கவலையடைவதாகவும் வீரர்கள் எதிர்பார்ப்பினை உடைத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் 91 ஓட்டங்களால் தோல்வியடைந்ததன் பின்னர் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
“முழு அணியின் நடவடிக்கை குறித்தும் கவலையடைகிறேன், முதல் போட்டியிலும் 150 ஓட்டங்கள் குறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்தோம்.. ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துகின்றோம், அவர்கள் எம்முடன் சிறப்பாக விளையாடினர்.. நாம் சிறப்பான ஆரம்பத்தினை பெற்றோம் என்றாலும் பந்துவீச்சில் நடு ஓவர்களில் சரிவினை நோக்கினோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர், களத்தடுப்பும் முன்னைய போட்டிகளை விட சிறப்பாக அமைந்தது.. துடுப்பாட்டமும் நன்றே… நாம் கடந்த தென்னாபிரிக்க அணியுடனான போட்டிகளில் சிறப்பாக விளையாடினோம்.. வீரர்கள் நம்பிக்கையினை இழந்துள்ளனர்.. எம்மால் முடியாமல் போனது மன உளைச்சலினை கட்டுப்படுத்த… 150 ஓட்டங்களை கடக்க முடியாது தவிக்கும் போது அதிகளவு மன உளைச்சலுக்கு ஆளாவதோடு நம்பிக்கையினும் உடைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம்..”