(FASTNEWS | COLOMBO) – ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி 09 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
லண்டனில் நேற்று(27) மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான உலகக் கிண்ண 09 ஆவது பயிற்சிப் போட்டியில் ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குல்பாடின் நாய்ப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 38.4 ஓவரை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
161 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 09 விக்கெட்டக்களால் வெற்றிபெற்றது.


