ஆப்கான் தாக்குதலுக்கு ஒபாமா மன்னிப்புக் கோரினார்

ஆப்கானிஸ்தானிலுள்ள குண்டூஸ் நகர மருத்துவமனையில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை, கடந்த வாரம் நடத்திய விமான தாக்குதலில் சுமார் 22 பேர் பலியாயினர். இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட மருத்துவமனையில் பணியாற்றிய தனியார் தொண்டு நிறுவன இயக்குனரிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, தாக்குதலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.