ஆப்கானிஸ்தானில் சீக்கியர் மற்றும் இந்துக்களும் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து அங்கு அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினமும் இவர்கள் மிகப்பெரும் தாக்குதலுக்கு இலக்காகினர்.
இதில் 19 பேர் உடல் சிதறி பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர் மற்றும் இந்துக்கள் ஆவர். அங்கு சீக்கிய குழுக்களின் தலைவராக நீண்ட காலமாக பதவி வகித்து வந்த அவதார் சிங் கல்சாவும் இதில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில், நேற்று(02) ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. இது தொடர்பாக அந்த இயக்கம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.