ஆப்கான் விமான விபத்தில் 11 பேர் பலி

ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் விமானமொன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜலலாபாத் விமான நிலையத்தில் சீ -130 என்ற விமானமே நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு விபத்துக்குள்ளானது. 06 அமெரிக்க இராணுவ வீரர்களும் சிவில் ஒப்பந்தக்காரர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த விமானத்தை தமது குழுவொன்று சுட்டு விழுத்தியதாக தலிபான் பேச்சாளர் ஸபிஹுல்லா முஜாஹித் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால், இவ்வாறான தாக்குதல் இடம்பெற்றதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லையென செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

(riz)