கொழும்பு குற்ற பிரிவினரால் கைது செய்யப்பட்ட ‘ஆமி ரொஷான்’ எனப்படும் ரொஷான் பிரதீப் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து ஆமி ரொஷான் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆமி ரொஷான் எனப்படுபவர் களுத்துறை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
மேலும், அவருக்கு எதிராக கொள்ளைச் சம்பவம் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஆமி ரொஷான் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் என்பதோடு, அவர் சட்ட ரீதியான இராணுவத்தில் இருந்து விலகவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
எனவே இவரை மேலதிக விசாரணைகளுக்காக இராணுத்தில் ஒப்படைக்க கொழும்பு குற்றப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.