ஆயுர்வேத வேலையில்லா வைத்திய பட்டதாரிகள் இன்று பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சு முன்பாக மேற்கொள்ளப்பட்ட குறித்த சத்தியாக்கிரக போராட்டமானது இன்று மாலை வரை முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2011ஆம் வருடத்திலிருந்து பட்டப்படிப்பை முடித்த வைத்தியர்களை இதுவரை தொழிலில் இணைத்துக்கொள்ள வில்லை என தெரிவித்தார்கள்.
இதன்போது பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், சுமார் 700 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இல்லாமல் இருப்பதாகவும், வைத்திய தொழிலுக்கான நியமனங்கள் காணப்பட்ட போதிலும் தம்மை வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை என குற்றஞ் சுமத்தினர்.
மேலும் இது பற்றி சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்ததாகவும், அரசு இதுவரை எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை எனவும் ஆயுர்வேத வேலையில்லா வைத்திய பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
“உடனடியாக அரசாங்கம் இதுபற்றி உரிய தீர்மானம் எடுக்கவேண்டும் இல்லையேல் சாகும் வரையிலான உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும்” என இதன்போது ஆயுர்வேத வேலையில்லா வைத்திய பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் மேலும் கூறினார்.