ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்..

கொடுப்பனவு பிரச்சினையை மையப்படுத்தி ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமது மாதாந்த கொடுப்பனவில் சேர்க்கப்படும் 1000 ரூபாய் 13 மாதங்களாக தமது கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் அதற்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தப் பேராட்டம் என்றும் அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய பொரளை ஆயுர்வேத போதனா மருத்துவமனை, யக்கல, அம்பாறை, அம்பாந்தோட்டை சமல் ராஜபக்ச மருத்துவமனை, நாவின்ன உள்ளிட்ட இடங்களிலுள்ள ஆயுர்வேத வைத்திய பணியாளர்களே இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.