தரம் 1, 2 மற்றும் 3 ஐ சேர்ந்த ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 5 பேர், விசேட வைத்திய நிபுணர்கள் 5 பேர் மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் குறித்த இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றவிதத்தில் பரீட்சை நடைமுறையை மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதனை கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.