கொழும்பு – 7இல் அமைந்துள்ள ஆர்கேட் வர்த்தக பூங்கா, கொழும்பு பழைய குதிரை பந்தய திடல், நுவரெலியாவில் உள்ள பழைய தபால் நிலையம் ஆகியவற்றை தனியார் முதலீடுகளுக்கு வழங்கும் யோசனை ஒன்றை நிதியமைச்சு முன்வைத்துள்ளது.
ஆர்கேட் வர்த்தக பூங்காவை தனியார் முதலீட்டாளர் ஒருவர் கோரியுள்ளதாக அரச பொருளாதார குழுவில் பேசப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் மதிப்புள்ள தபால் நிலைய கட்டடத்தை பிரபல இந்திய ஹொட்டல் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க வேண்டும் என்ற யோசனையை பொருளாதார குழு ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பு 7 ஆர்கேட் வர்த்தக பூங்கா மற்றும் பழைய குதிரை பந்தய திடல் ஆகியவற்றை தனியார் பயன்படுத்துவதை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடுமையாக எதிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே மத்தள விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள 800 ஏக்கர் நிலம் மதிப்பீடு செய்து, மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நிதியமைச்சு கோரியுள்ளது.